பாகிஸ்தானில் யாரோ ஒருவர், கியு.ஆர் கோடு இஸ்லாத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளார். இதனையடுத்து கியு.ஆர் கோடு என்றால் என்ன?, அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது?, அதன் நன்மைகள் என்ன?, முக்கியமாக அது உண்மையிலேயே இஸ்லாத்துக்கு எதிரானதா? என எதையும் ஆராயாத ஒரு முஸ்லிம் கும்பல், அங்கிருந்த சாம்சங் ஷோரூமை சூறையாடியது. இந்த காணொளிகாட்சி தற்பொழுது உலகெங்கும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக, பாகிஸ்தானின் சஞ்சால் கோட் பகுதியை சேர்ந்த முல்லா என்பவர், கடந்த ஜனவரி 2ம் தேதி, 7 அப் குளிர்பான பாட்டிலில் முகமது பெயர் இடம் பெற்று இருக்கிறது. ஆகவே, அதனை உடனடியாக நீக்க வேண்டும் என்று கியு.ஆர் கோடினை சுட்டிக்காட்டி ஆவேசமாக பொதுமக்களிடம் ஆவேசமாக பேசினார். அருகில், இருப்பவர் இதுவெறும் கியு.ஆர் கோடு தான் என்று கூறியும் சமாதானம் அடையாத அந்த நபர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் கியு.ஆர் கோடினை உடனே நீக்கவில்லை என்றால் வண்டியை கொளுத்துவேன்; அல்லாவிற்காக எனது உயிரையும் கொடுப்பேன் என்று பேசினார். இந்த காணொளி காட்சியும் அப்போது இணையத்தில் பரபரப்பானது.