மத்திய அரசு, 2020ம் ஆண்டு ஜூலை 29 அன்று தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை அறிவித்தது. இது தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் கல்வி முறையின் தரத்தை மேம்படுத்த பரிந்துரைக்கிறது. இதனை மேலும் செம்மைப்படுத்த ஏதுவாக, தேசிய ஆலோசனை குழுக்கள் மற்றும் தேசிய வழிநடத்தல் குழு போன்றவை, இணையதளம் மற்றும் அலைபேசிகளை பயன்படுத்தி மக்கள் கருத்துகளை தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது. இக்குழு, பல்வேறு அமைச்சகங்கள், தன்னாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுடன் கலந்தாலோசித்து வருகிறது. அது மட்டுமின்றி, நாட்டிலுள்ள பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, தலைமை ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர், மாணவர், அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைப் பருவப் பராமரிப்பாளர்கள் போன்ற கல்வியுடன் நேரடித் தொடர்புடையவர்கள் மற்றும் பொதுமக்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள், சமூக அமைப்பின் உறுப்பினர்கள், அரசு சாரா நிறுவனங்கள், வல்லுநர்கள், கலைஞர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட கல்வியில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். நமது அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் உட்பட 23 மொழிகளில் இந்த ஆன்லைன் சர்வே நடத்தப்படுகிறது. இதன் அடிப்படையில், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்கு, செம்மப்படுத்துவதற்கு மதிப்புமிக்க உள்ளீடுகளை சேகரித்தல், தொகுத்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும். பாரதத்தில் ஒரு வலுவான, மீள்தன்மை மற்றும் ஒத்திசைவான கல்வி முறையை உருவாக்க பங்களிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் சர்வேயில் பங்குகொள்ள http://vsms.sms.gov.in/OMZhm8YvAQE என்ற இணையதளத்தை அனுகலாம்.