மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஐ.ஐ.டி ஹைதராபாத் வளாகத்தில் ஆளில்லா தானியங்கி தரை மற்றும் வான்வழி வாகனங்களை உருவாக்குவதற்கான முதல் வகை, அதிநவீன சோதனை வசதியை தொடங்கி வைத்தார். 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்ட இந்த தானியங்கி வழிசெலுத்தல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் (டிஹான்) என்பது ஒரு பல்துறை முயற்சியாகும். இது பாரதத்தை எதிர்கால மற்றும் அடுத்த தலைமுறை ‘ஸ்மார்ட் மொபிலிட்டி’ துறையில் உலகளாவிய முக்கியத்துவம் பெறவைக்கும் தொழில்நுட்பமாகும். இந்நிகழ்வின் போது, ஓட்டுநர் இல்லாத சுயமாக இயக்கப்படும் மோட்டார் கார்கள், ஓட்டுநர் இல்லாத சுயமாக இயக்கப்படும் சைக்கிள்கள் போன்ற ஆளில்லா தரை மோட்டார் வாகனங்கள், ஆளில்லா விமானங்களை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவன பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார். அப்போது அவர், ‘நிஜ வாழ்க்கை போக்குவரத்து நடவடிக்கைகளில் நிகழக்கூடிய பல்வேறு காட்சிகளை உருவகப்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஆளில்லா மற்றும் இணைக்கப்பட்ட வாகனங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்ய வரையறுக்கப்பட்ட சோதனை அமைப்புகள் உலகளவில் உள்ளன. ஆனால் இதுவரை அத்தகைய வசதி பாரதத்தில் இல்லை. எனவே நமக்கு இந்த டிஹான் டெஸ்ட் பெட் தேவை. இது உயர்தர ஆராய்ச்சிக்கு ஒரு தனித்துவமான தளத்தை வழங்கும். இதனால் தன்னாட்சி வழிசெலுத்தல் தொழில்நுட்பங்களில் பாரதத்தை முன்னிலைப்பெறும். மற்றவர்களுக்கும் இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்பதால், இந்த முயற்சியை ஆதரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முன்வந்துள்ளது. பாரதத்தின் வகனத்துறையானது உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று, இது தன்னியக்க வாகனங்களுக்கான எதிர்கால தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு ஆதாரமாக இருக்கும் . பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு பாரதத்தை முன்னணியில் நிறுத்தும் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான இடைநிலை சைபர் இயற்பியல் அமைப்புகளின் (NM-ICPS) கீழ் நாடு முழுவதும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மூலம் 25 தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்களை அமைப்பது அத்தகைய ஒரு முயற்சிகளில் ஒன்றாகும்’ என கூறினார்.