வேலூர் கோட்டையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழககவர்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி வேலூர் சிப்பா புரட்சி நினைவு தினம் விழாவில் பங்கேற்று, முன்னாள் படை வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அவர் தம் குடும்பத்தார், என்சிசி மாணவர்கள் பொதுமக்களிடையே உரையாற்றினர். தமிழ் பழமையான சக்தி வாழ்ந்த அழகான மொழி. தமிழர்களின் கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்கு தமிழகம் வகிக்கிறது. வேலூர் சிப்பாய் புரட்சி இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் வித்தாகும். இந்திய வீரர்கள் நூற்றுக்கானவர்கள் தன்னுடைய உயிரை தியாகம் செய்தனர். அவற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வருகின்ற 75வது சுதந்திர தினத்தன்று நாம் சுதந்திரத்துக்காக உயிர்நீத்த அனைவரையும் நினைத்து பார்க்க வேண்டும் .
வேலூர் மாவட்டத்தில் இருந்து இந்தியாவின் ராணுவத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களை அர்ப்பணித்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வானமே எல்லை என்ற நிலை உள்ளது எனவே இளைஞர்கள் நாட்டிற்காக பாடுபட வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒவ்வொரு வீரர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.