ஜம்மு-காஷ்மீரில் 2 இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0
182

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அவந்திபோரா பகுதியின் வந்தகபோராவில் தேடுதல் நடவடிக்கையின்போது இந்த மோதல் நிகழ்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
சுட்டுக் கொல்லப்பட்டவா்களில் ஒருவா் கைசா் கோக் எனவும் மற்றொருவரை அடையாளம் காணும் நடவடிக்கை தொடா்வதாகவும் அதிகாரிகள் கூறினா்.
பயங்கரவாதிகளிடமிருந்து கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் போலீஸாா் கைப்பற்றியுள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here