வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, நல்ல ஆரோக்கியம், பாலின சமத்துவம், துாய்மையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி, நியாயமான விலையில் பசுமை எரிசக்தி வழங்குதல், தொழில், கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட, 17 அம்சங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
‘நீடித்த வளர்ச்சி இலக்கில் முன்மாதிரி இந்தியா’ என்ற கருத்தரங்கம் ஐ.நா.,வில் நடந்தது. ஐ.நா., துணைத் தலைவர் அமினா முகமது பேசியதாவது:ஐ.நா.,வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கில், இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்துள்ளது. இதில் இந்தியா, இதர நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, மாவட்ட அளவில் மட்டுமின்றி குக்கிராமத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் திட்டத்தின் பயனை கொண்டு சேர்த்துள்ளன. இதற்கு, மத்திய அரசையும், ‘நிடி ஆயோக்’ அமைப்பையும் பாராட்டுகிறேன். அவர் பேசினார்.