கள்ளக்குறிச்சி போராட்டம்: வன்முறைதான் தீர்வா? நீதிபதி கேள்வி

0
321

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது யார்?,
அங்கு படித்த மாணவர்களின் சான்று எரிக்கப்பட்டுள்ளது. இதில் 4,500 மாணவர்களின் நிலை என்ன?
மாணவர்களுக்கு என்ன மாதிரியான நியாயம் வழங்கப்படும்?. நேற்று நடந்த வன்முறை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இது போராட்டம் அல்ல, சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதி அளிக்கக்கூடாது.

இறந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்காலம் என்னாவது?
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது போராட்டம் நடத்த சென்றது ஏன்?
போலீசார் தனித்து நின்று போராடி உள்ளனர். யாருடைய கட்டுப்பாட்டிலும் போலீசார் இல்லை என்பதையும் பார்க்க முடிகிறது. சட்டத்தை முறையாக அனுமதித்தீர்களா?
உளவுத்துறை தரப்பில் போலீசாருக்கு உரிய தகவல் அனுப்பி வைக்கப்பட்டதா?
இதனை போலீசார் எவ்வாறு கையாண்டனர்?
3 நாட்களாக போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர்?
சமூக வலை தளங்களில் பதிவிட்டது குறித்து போலீசார் ஏன் கவனக்குறைவாக இருந்தனர்?
தகவல் பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது. இது போன்ற வன்முறை பலரது மாணவர்களின் வாழ்வை பாதிக்கும்.
இதன் பின்னணியில் இருப்பவர்கள் சிறப்பு போலீஸ் படையினர் கண்டுபிடிக்க வேண்டும். கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறை ஏற்கத்தகக்கதல்ல, மீண்டும் வன்முறை நடந்தால் இரும்புக்கரம் கொண்டு போலீசார் அடக்க வேண்டும். வன்முறை சம்பவத்தை கோர்ட் கண்காணிக்கும். வன்முறையாளர்களை கைது செய்து பள்ளியில் ஏற்பட்ட சேதங்களை வசூலிக்க வேண்டும். இயற்கைக்கு மாறான மரணங்கள் பள்ளியில் நடந்தால் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மாணவி உடற்கூறு செய்வதில் தகுதி இல்லாத மருத்துவர்கள் என்று யாரும் சொல்ல முடியாது. மீண்டும் உடற்கூறு ஆய்வு நடத்த அனுமதி அளிக்கிறேன். மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மனுதாரர் உடற் பரிசோதனை நடத்தும் போது மனுதாரர் (மாணவியின் தந்தை ) அவரது வழக்கறிஞர் பங்கேற்கலாம்.
வீடியோ பதிவு செய்ய வேண்டும். உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னர் முடிவை ஏற்று மாணவியின் உடலை பெற்று கொள்ள வேண்டும், இறுதிச்சடங்கு அமைதியான முறையில் நடக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்; யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்திடமும் வழங்கப்பட்டுள்ளது. என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here