திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை

0
323

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட, இலங்கையை சேர்ந்த 67 பேர் உட்பட கனடா, இஸ்ரேல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளி நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், பலருக்கு தண்டனை காலம் முடிந்தும் விடுவிக்கப்படவில்லை என்று கூறி, அவர்கள், பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த மே மாதம் முதல் 15க்கும் மேற்பட்டோர், தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
, திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அதன் பின், கடந்த 2ம் தேதி, 16 பேர் சிறப்பு முகாம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஐ.ஜி., டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., தலைமையிலான என்.ஐ.ஏ., ( தேசிய பாதுகாப்பு முகமை) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here