பால கங்காதர திலகர்

0
438

சுயராஜ்யம் எங்கள் பிறப்புரிமை என்று முதன் முதலில் கர்ஜனை செய்வதர் பால கங்காதர திலகர். அவர் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு பர்மாவிலுள்ள மாண்டலே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்தக் காலத்தில் மாண்டலே சிறையிலும் அந்தமான் சிறையிலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்தனர். அந்த நிலையிலும் கூட திலகர் சிறையில் இருந்தவாறே பகவத்கீதைக்கு விளக்கவுரை எழுதினார். அதற்கு கீதா ரகசியம் என்று பெயரிட்டார்.

‘சிறையில் எழுதப்பட்ட கீதா ரகசியத்தின் கையெழுத்துப் பிரதி ஒருவேளை ஆங்கிலேய அரசினால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால்…’ என்று ஒரு பத்திரிகையாளர் திலகரிடம் கேட்டார். அதற்கு திலகர், ‘அரசினால் என்னுடைய அறிவைப் பறிமுதல் செய்யமுடியாது. என்னால் மீண்டும் இந்த நூலை எழுதமுடியும்’ என்றார். அப்போது அவருக்கு வயது 60. அந்த வயதிலும் கூட அவருக்கு தீவிரமான தன்னம்பிக்கை இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here