அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது. பணி முடித்தவர்களுக்கு மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்பு ஆதரவுகள், சொந்தத் தொழில் தொடங்க உதவிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் பல மாநிலங்களில் தூண்டிவிடப்பட்ட வன்முறை போராட்டங்கள் நடைபெற்றன. எனினும் இத்திட்டத்தை திரும்ப மத்திய அரசு மறுத்து விட்டது. இளைஞர்களும் எதிர்கட்சிகளின் சதிவலையில் விழாமல் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 7 லட்சத்திற்கும் அதிகமானோர் விமானப்படையில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில், இந்திய கடற்படையில் சேருவதற்கு இதுவரை மொத்தம் 3,03,328 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.