பள்ளி மாணவி தற்கொலை

0
201

திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான பூசனம் மற்றும் முருகம்மாள் தம்பதியின் ஒரே மகள் சரளா. இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள ‘சேக்ரட் ஹார்ட்’ என்ற அரசு நிதியுதவி பெறும் கிறிஸ்தவ தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர் அப்போது தனியாக இருந்த மாணவி சரளா திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திரதாசன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தற்கொலை குறித்து விடுதி காப்பாளர்கள், பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் ஹிந்து பள்ளியில் பயின்ற ஒரு மாணவியின் மரணத்துக்கு குரல் கொடுத்தவர்கள் இந்த கிறிஸ்தவ பள்ளியில் பயின்ற மாணவியில் தற்கொலைக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதுதான் சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here