அமலாக்கத் துறைக்கான அதிகாரத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

0
229

பணப் பரிமாற்ற மோசடி வழக்குகளில், அரசியல் தலைவர்கள், பல மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தன் அதிகாரத்தை அமலாக்கத் துறை தவறாகப் பயன்படுத்துவதாக பல எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பணப் பரிமாற்ற மோசடி தடுப்புச் சட்டத்தின் சில குறிப்பிட்ட பிரிவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
பணப் பரிமாற்ற மோசடி தடுப்புச் சட்டத்தின், 19ம் பிரிவின்படி, கைது செய்வதற்கான அதிகாரம் அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சற்று கடுமையான சட்டமாக இருந்தாலும், தன்னிச்சையானது என்று கூற முடியாது.
“கைது செய்வதற்கு முழு அதிகாரம் அமலாக்கத் துறைக்கு உள்ளது.”குற்றஞ்சாட்டப்பட்டோருக்கும் சாதகமான பிரிவுகள் உள்ளதால், இந்தச் சட்டப் பிரிவை சட்டவிரோதமானது என்று கூற முடியாது.
பணப் பரிமாற்ற மோசடி வழக்குகளில் சொத்துக்களை முடக்கும் சட்டத்தின் 5ம் பிரிவும், அரசியல் சாசன சட்டத்தின்படி செல்லும்.அமலாக்கத் துறை வழங்கும் இ.சி.ஐ.ஆர்., எனப்படும் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.கைது செய்யும்போது, எந்த அடிப்படையில் கைது செய்யப்படுகிறார் என்பதை மட்டும் அமலாக்கத் துறை தெரிவித்தால் போதும். இந்தச் சட்டத்தின் பிரிவுகள், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதாக உள்ளன. இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here