தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை

0
235

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்பட உள்ள ‘ஹர் கார் திரங்கா’ (வீடுதோறும் மூவர்ண தேசியக்கொடி) இயக்கத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்கும் உலகத்திலேயே மிகப்பெரிய நிகழ்வாக இது நடத்தப்பட உள்ளது. பல வகைகளில் மக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதிக அளவில் கொடி வினியோகம் செய்யும் நிறுவனங்களை மத்திய ஜவுளித் துறை கண்டறிந்துள்ளது. ஆகஸ்டு 1ம் தேதியில் இருந்து பாரதத்தில் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் தபால் நிலையங்களிலும் தேசியக் கொடியை மக்கள் நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here