பயிற்சி நிறைவு விழாவில் ஒருங்கிணைந்த சாகச நிகழ்ச்சி, ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், நேற்று நடந்தது. அவர்கள் பெற்ற பயிற்சிகளை சாகசமாக செய்து அசத்தினர்.ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, உடற்பயிற்சி நிகழ்ச்சியும், பின்னர், கேரளாவின் புகழ்பெற்ற தற்காப்பு கலையான களறி பயட்டு பயிற்சியிலும் வீரர்கள் அசத்தினர்.நெருப்பு வளையத்துக்குள் தாண்டுதல், மனித கோபுரம் அமைத்தல், குதிரை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் இளம் வீரர்கள்நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில், பயிற்சி மைய தலைவர் லெப்டினென்ட் ஜென்ரல் சஞ்சீவ் சவுகான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பயிற்சி அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளைவழங்கினார்.