உமாகாந்த் மிஸ்ரா ஒரு தபால்காரர். 10 வருடங்களுக்கு முன்பு ஒரு டாலர் திருடிவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு 29 வருடம் நடந்து பின்னர் அவர் குற்றமற் றவர் என்று தீர்ப்பு வந்தது. 29 வருடத்தில் வழக்கிற்காக 348 தடவை நீதிமன்றம் சென்று வந்துள்ளார்.
ஃப்பேக்ட் செக்கர் என்ற பெயரில் ஹிந்து விரோத மோதி விரோத பொய் செய்தி களை பரப்பிக் கொண்டிருந்த ஜூபைர்க்கு 23 நாளில் பெயில் வழங்குகிறது உச்சநீதி மன்றம். உ.பி. அரசு அவர் மீது பதிவு செய்திருந்த வழக்குகளை தில்லிக்கு மாற்றுகிறது. ஜுபைர் டுவீட் போடலாம். அதை தடை செய்ய முடியாது. அவர் ஒரு ஜர்னலிஸ்ட் (டுவீட் போடுவது ஜர்னலிஸ்ட் என்று நீதிபதி முடிவு செய்துவிட்டார்).
அவசர அவசரமாக பெயில் ஆர்டர் டைப் செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு முன்பு அவரை ஜெய்லில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப் படுகிறது. ஜூபைர் வெளியே வந்த பிறகுதான் அஸ்தமிக்க வேண்டும் என்று சூரியனுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை.
நீதிபதிகள் சிலர் அநீதிக்கு துணை போகின்றனர். இவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் அல்லது ஊடகங்கள் பேசினால் எழுதினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீதிபதிகள் நியமனத்தில் உள்ள கோலீஜிய முறை மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு மாற்றம் பிறக்கும்.