ஆடிப்பூரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேர்

0
266

 

. ஸ்ரீ வானமாமலை பத்தொன்பதாவது ஜீயர் பெரிய பட்டர் பிரான் சுவாமி பொது ஆண்டு 1843 முதல் 1853 வரை பட்டத்தை அலங்கரித்தருளினார்கள் .

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாளும் , ரங்கமன்னாரும் ஜீயர் ஸ்வாமிகள் கனவில் திருமணக்கோலத்தில் எழுந்தருளி ” ஜீயரே நம்முடைய வைபவத்துக்குத் தங்கும்படி பெரிய திருத்தேர் ஒன்றைச் செய்வித்து , நாமும் ,நாமும் நாச்சியாரும் வீதியாற வரும்படி செய்யக் கடவீர் ” என்று நியமித்தனர் .

ஜீயர் ஸ்வாமியும் திருவனந்தபுரம் மன்னர் மூலம் இந்த திருத்தேரை செய்வித்து சமர்பித்து அருளினார் .

இந்த செய்தி முனைவர் . செ லக்ஷ்மீநாராயணன் அவர்கள் எழுதிய ஸ்ரீவானமாமலை தோற்றமும் ,வளர்ச்சியும் என்ற நூலில் உள்ளது .

இந்த நூலில் உள்ள தகவல் படி ஆராய்ந்தால்

1843 -1853 காலகட்டத்தில் இந்தியா குறிப்பாக தமிழகம் கிழக்கிந்திய கம்பெனி கட்டுப்பாட்டில் இருந்துள்ளது . இந்த காலகட்டத்தில் திருவனந்தபுரம் சமஸ்தான அதிபதியாக இருந்தவர் உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா ஆவார். இதே காலகட்டத்தில் மதராஸ் பட்டணத்தில் கவனர்களாக ஜார்ஜ் ஹே( 24 செப்டம்பர் 1842 23 பிப்ரவரி 1848 )
ஹென்றி டிக்கின்சன் (தற்காலிகம்) (23 பிப்ரவரி 1848 7 ஏப்ரல் 1848 )
ஹென்றி பாட்டிங்கர் (7 ஏப்ரல் 1848 24 ஏப்ரல் 1854 ) ஆகிய மூவர் இருந்துள்ளார்கள் .

இதே காலகட்டத்தில் இராபர்ட்டு கால்டுவெல் போன்றவர்களின் தீவீர மதப்பணி நடந்து வந்த காலகட்டம் .1841 ல் கால்டுவெல் குரு பட்டம் பெற்று இடையன்குடியில் தன் மதப்பணிகளை ஆரம்பித்துவிட்டார் . திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) வெளிவர இருந்த காலகட்டம் .

இந்த காலகட்டத்தில் ஸ்ரீ வானமாமலை பத்தொன்பதாவது ஜீயர் பெரிய பட்டர் பிரான் சுவாமி செய்த திருத்தேர் ,அதன் வெள்ளோட்டம் ,திருத்தேர் திருவிழா பெரும் சிறப்புக்குரியது .

இந்து சமஸ்தான காலத்தில் ஒரு இந்து மதகுரு செய்வதற்கும் , ஆங்கிலேயர் கால கட்டத்தில் செய்வதற்கும் மிக மிக வித்தியாசம் உள்ளது .

முக்கியமாக இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள தென் பகுதியில் தான் பாளையக்காரர்களான பூலித்தேவர் , வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களின் வீர எழுச்சி இருந்த இந்த கால கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியும் இந்த தேர் திருவிழாவை கண்காணித்து இருக்க கூடும் .

பெரிய பட்டர் பிரான் சுவாமி திருவடிகளே சரணம் .
                                                                                                                   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here