தமிழகத்தில் பல் டாக்டர்  டி.எஸ்.பி., ஆனார்

0
255

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உலகநடையை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் மனைவி பாண்டீஸ்வரி 28. பல் டாக்டரான இவர் அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற்றார். சமீபத்தில் முடிந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.,யாக தேர்வாகியுள்ளார்.
கடந்த 2018ல் பல் டாக்டர் பட்டம் பெற்றேன். 2019 முதல் அரசு தேர்வுக்கு படித்து வந்தேன். சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில், 522.5 மார்க் பெற்று மாநில அளவில் 57ம் இடம் பிடித்தேன்.முதல் முயற்சியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.
தந்தை விருப்பப்படி டாக்டர் ஆகிவிட்டேன். எனக்கு கலெக்டர் ஆவதே விருப்பம். என் முயற்சி தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.அவருக்கு கட்லாங்குளம் கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here