திருச்சி. ஆகஸ்ட்-5. திருச்சியில் இன்று விஸ்வ ஸம்வாத்கேந்திரம் தக்ஷிண் தமிழ்நாடு சார்பில் ஸ்ரீ நாரத ஜெயந்தி மற்றும் “நாரத” விருது வழங்கும் விழா பால்பண்ணை அருகில் TMR மகாலில் மாலை 6 மணிக்குத் துவங்கி நடைபெற்றது.
விழாவிற்கு RSS-ன் கோட்டத் தலைவர் ஸ்ரீ கிருஷ்ண முத்துசாமி தலைமை வகித்தார். முனைவர் ஸ்ரீ P பெருமாள், ஓய்வு பெற்ற நூலகர் மற்றும் ஓலைச்சுவடி காப்பாளர், (தஞ்சை சரஸ்வதி மஹால்) அவர்கள் முன்னிலை வகித்தார். ஸ்ரீ பா.பிரகாஷ், RSS-ன் கேரளா மற்றும் தமிழ்நாடு மக்கள் தொடர்பு அதிகாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
பல்வேறு ஆன்மீக மற்றும் மனித வள புத்தகங்கள் எழுதியுள்ள எழுத்தாளர் முனைவர் “தென்காசி “ ஸ்ரீ கணேசன் மற்றும் ராக்போர்ட் டைம்ஸ் ஆசிரியரும் வெளியீட்டாளருமான ஸ்ரீ SR லக்ஷ்மி நாராயணன் ஆகிய இருவருக்கும் “நாரத விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் சிறப்புரை ஆற்றிய ஸ்ரீ பிரகாஷ் “ நாரதரை பற்றிய தவறான கண்ணோட்டம் மக்களிடையே பரவியுள்ளது. அவர் மூவுலகையும் இணைக்கும் ‘திரிலோக சஞ்சாரி’ என பெயர் பெற்றவர். பல நல்லக் கருத்துக்களை விதைப்பவர். அதேபோல் இன்றைய பத்திரிகையாளர்களும் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லவேண்டும். கெட்ட தகவல்களை சொல்லகூடாது “ என்று கூறினார்.
ஸ்ரீ K K சுவாமி அவர்கள் எழுதிய ‘அதிசயமே அதிசயிக்கும் RSS’ என்ற ஆடியோ புத்தகமும், வழக்குரைஞர். ஸ்ரீ கேசவன் அவர்கள் எழுதிய ‘ஹிந்து கோயில்கள் அமைப்பு முறை மற்றும் பாதுகப்பு சாதனம்’ ஆகிய இரு நூல்களும் வெளியிடப்பட்டது.
விழாவில் தென் தமிழ்நாட்டின் RSS-ன் மாநில இணைச் செயலாளர் ஸ்ரீ மணி, மாநில ஊடகத்துறை பொறுப்பாளர் ஸ்ரீ மோகன், திருச்சி கோட்டச் செயலாளர் ஸ்ரீ செல்வம், கோட்ட அமைப்பாளர் ஸ்ரீ அரவிந்த், நகரத் தலைவர் ஸ்ரீ ரஜினிகாந்த் பாரதிய கிசான் சங்க முன்னாள் பொறுப்பாளர் ஸ்ரீ ஸ்ரீகணேசன், பாரதிய கிசான் சங்க மாநில அமைப்பாளர் ஸ்ரீ CS குமார், கோ சேவா மாநில அமைப்பாளர் ஸ்ரீ கோவிந்தராஜன், விஸ்வ ஸம்வாத் கேந்திரம் மாநில அமைப்பாளர் ஸ்ரீ ராம்நாத் மற்றும் பத்திரிகையாளர்களும் சமுக ஊடகத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியை திருச்சி மாவட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் ஸ்ரீ பாலாஜி பிரபு தொகுத்து வழங்கினார். ஊடகத்துறை நகர் பொறுப்பாளர் ஸ்ரீ ராம் ரத்தினம் நன்றியுரை கூறினார் .
தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது .