ராஜேந்திர தோண்டு போன்ஸ்லே மும்பை டி.என்.நகர் காவல் நிலையத் தில் 2008-15 வரை சப் இன்ஸ்பெக்டர் ஆக பதவியில் இருந்தவர்.
பணியில் இருந்த அந்த வருடங்களில் 166 பெண்கள் காணாமல் போய்விட்ட தாக புகார் வந்தது. காணாமல் போன பெண்களை மீட்க வேண்டிய பொறுப்பு இவரிடம் இருந்தது.
பதவியில் இருந்து பணி நிறைவு ஓய்வு பெறுவதற்கு முன்பாக 165 பெண்களை கண்டுபிடித்து அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஒரே ஒரு பெண்ணை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் மனதில் இருந்தது.
பதவி ஓய்வு பெற்றாலும் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருக்கவில்லை. காணாமல் போன 166 வது பெண்ணைத் தேடுவதை நிறுத்தவில்லை.
அக்கரையுடன் உண்மையாக முயற்சி செய்தால் வெற்றிகிட்டும் என்பது ராஜேந்திர தோண்டு போன்ஸ்லே விஷயத்திலும் நிரூபணம் ஆயிற்று.
காணாமல் போன அந்த 166 வது பெண் ணையும் கண்டு பிடித்து மீட்டு அவரது குடும்பத்தினரிடம் சேர்த்துள்ளார். 9 வருடம் 7 மாதங்களுக்குப் பிறகு அப்பெண் தன் குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.
மகனையோ மகளையோ அல்லது வீட்டில் யாராவது ஒருவர் காணாமல் போய் விட்டால் எவ்வளவு பெரிய துயரத்திற்கு ஆளாவர் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்கிறார்.
இப்போது நான் நிம்மதியாக உள்ளேன் என்று ராஜேந்திர தோண்டு போன்ஸ்லே கூறுகிறார்.