சீன இராணுவத்தின் அத்து மீறலை எதிர்கொள்ள லடாக்கில் ரோந்து வரும் இந்திய ராணுவத்தின் டி-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லையில் குவித்து உள்ளது. துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் மிக்கது. ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டதாகும். சீனா படைகளை குவித்ததை தொடர்ந்தே இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயார் நிலையில் உள்ளது.
Home Breaking News சீன இராணுவத்தின் அத்து மீறலை தடுக்க இந்தியா டி-90 பீஷ்மா பீரங்கிகளை லடாக்கில் குவித்துள்ளது