ஐ.எஸ். பயங்கரவாதியிடம் நள்ளிரவை கடந்தும் போலீசார் விசாரணை

0
226

ஐ.எஸ். பயங்கரவாதியிடம் நள்ளிரவை கடந்தும் போலீசார் விசாரித்தனர்.ஈரோடு, மாணிக்கம்பாளையம், ஹவுசிங் யூனிட், முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த, நில புரோக்கர் மகபூப் மகன் ஆசிப் முசாப்தீன், 28; ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்.மத்திய அரசின் என்.ஐ.ஏ, குழுவினர் கடந்த மாதம் இவரை கைது செய்தனர்.
10 பிரிவுகளில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முசாப்தீனிடம், இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, ஈரோடு நீதிமன்றம் அனுமதி அளித்தது.தொடர்ந்து ரகசிய இடத்தில், நேற்று முன்தினம் இரவு விசாரணை துவங்கியது.
எஸ்.பி., சசிமோகன், டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார் ஆகியோர், தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.அவர்களுடன் மத்திய அரசின் ஐ.பி., போலீசாரும் உள்ளனர்.இதில், பயங்கரவாத அமைப்புக்கு வேலை செய்தது உறுதி செய்யப்பட்டால், என்.ஐ.ஏ., குழுவினர் மீண்டும் விசாரணை நடத்துவர் என, தெரிகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவை தாண்டியும் விசாரணை தொடர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here