வீரமரணமடைந்த ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி

0
375

காஷ்மீரில் 11ம் தேதி அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் என்பவர் வீரமரணம் அடைந்தார்.
அவருடைய உடல் இன்று மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.விமான நிலையத்தில் அரசு சார்பில் , நிதியமைச்சர் ,கலெக்டர் அனிஷ் சேகர், அதிகாரிகள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின் அவருடைய உடல் சொந்த ஊர் புதுப்பட்டி கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இவர் உடல் 4 மணியளவில் , அவர் சொந்த தோட்டத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here