தக்கலையில் ஜென்மாஷ்டமி விழா

0
463

தக்கலை  18 ஆகஸ்ட் 2022 ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மாளவியா வித்யா கேந்திரம் குமாரகோவில் பள்ளியில்  பகவான் கண்ணனின் ஜென்மாஷ்டமியை  முன்னிட்டு சுமார் 150 மாணவ மாணவிகள் ராதா கிருஷ்ணன் வேடமணிந்து  குமார கோவில் வீதிகளில் வலம் வந்தனர். மாணவ மாணவியர்களுக்கு பொதுமக்கள் வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  நிகழ்ச்சியில் மாளவியா வித்யா கேந்திர அறக்கட்டளையின் செயலாளர் திரு வி ஆர் தெய்வ பிரகாஷ் சிறப்புரையாற்றினார். ராதா கிருஷ்ணன் வேடமடைந்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஏ. லதா குமாரி நிர்வாக அலுவலர் ஏ.  ராஜேந்திரன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here