வேகமான வாழ்கை சூழலில் சொற்கள் அருகி வருகின்றன. நம்முடைய வரி வடிவ மொழி, பேச்சு மொழி இவற்றில் எத்தனை சொற்கள் இருந்ததோ அது எல்லாம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.குறிப்பாக சில குறிப்பிட்ட பழங்குடி மக்கள் பேசக்கூடிய மொழி முழுவதுமாக காணப்படாது போகின்றது. பழங்குடி மக்கள் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லாமல் இருக்கிறது. ஆகவே அது வேகமாக அழிந்து வருகிறது என தோன்றுகிறது.1961 மக்கள் தொகை கணக்கீட்டின் போது 1100 மொழிகள் பேச பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது 220 மொழிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. அடுத்த ஐம்பது வருடங்களில் ஏறத்தாழ 150 அந்நிய மொழிகளுக்கும் இதே நிலைமை தான் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. பழங்குடி மக்கள் பேசக்கூடிய பேச்சு மொழிகள் முற்றிலும் அழிந்து கொண்டு வருகிறது. மலைவாழ் மக்களின் ஐந்து பேச்சு மொழி முற்றிலும் அழிந்தே விட்டது.