1. வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை செப்டம்பர் 5 1872 தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவர்.
2. கிறிஸ்தவ பிரிட்டிஷ் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.
3. இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.
4. வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை உடையவர்.
5. இவரது வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது.
6. 1895ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார்.
7. வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார்.
8. வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் “சுதேசி பிரச்சார சபை”, “தர்ம சங்க நெசவு சாலை”, “தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்”, “சுதேசிய பண்டக சாலை”, “வேளாண் சங்கம்” போன்றவற்றை ஏற்படுத்தினார்.
9. நெல்லை மாவட்டத்தில் ஆங்கிலேய கிறிஸ்தவ அடக்குமுறையை கண்டித்து நடைபெற்ற கூட்டங்களில் பேசியதற்காக ராஜ துவேஷ வழக்கு போட்டு இரண்டு ஜென்ம தண்டனை விதித்தது ஆங்கில கிறிஸ்தவ அரசு .
10. கோவை மத்திய சிறையில் செக்கிழுத்தார் அந்த செம்மல்
11. அவர் செக்கிழுப்பதை ஏளனம் செய்த ஆங்கில அதிகாரியிடம் அவர் சொன்னது செக்கையா இழுக்கிறேன் எனதருமை பாரதத் தாய் அமர்ந்திருக்கும் திருத் தேரை அல்லவா இழுக்கிறேன் என்றார்.