1. கல்யம்புடி ராதாகிருஷ்ண ராவ் கர்நாடகாவில் 1920, செப். 10 – ல் பிறந்தார்.
2. கணிதவியல், புள்ளியியல்,பொருளாதாரம், மரபியல், மானுடவியல், நிலவியல், தேசிய திட்டமிடல், மக்கள்தொகையியல், மருந்தியல், உயிரிப் புள்ளியியல் உள்ளிட்ட பல துறைகளிலும் கரை கண்ட வித்தகர்.
3. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, இந்தியாவின் முதல் 10 அறிவியலாளர்களில் ஒருவராக ராவை பட்டியலிட்டுள்ளது.
4. ஐ.நா.சபையின் புள்ளியியல் துறைக் குழுவின் தலைவராக ராவ்
இருந்தபோது, ஆசிய அளவில் புள்ளியியல் கல்வி மையம் துவங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
5. உலக அளவில் புள்ளியியல் துறையின் மையப்புள்ளியாக இந்தியா விளங்க வேண்டும் என்பதே அவரது கனவு.
6. இந்திய அரசின் பத்மபூஷண் (1968), மற்றும் பத்மவிபூஷண் விருது (2001) பெற்றவர்.