குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் சோமநாதர் கோவில் அமைந்துள்ளது. டிரஸ்டிகளில் ஒருவரான அமித் ஷா, நேற்று கடற்கரை அருகே நிறுவப்பட்டுள்ள ஹனுமன் சிலையை திறந்து வைத்தார். சோமநாதர் கோவிலில் வழிபாடு நடத்தினார்.அதைத் தொடர்ந்து சோமநாதர் கோவிலில் சுவாமிக்கு கங்கை நீரை சுத்திகரித்து அபிஷேகம் செய்வதற்காக நிறுவப்பட்டுள்ள இயந்திரத்தையும் துவக்கி வைத்தார். அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர், பாட்டில்களில் அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.