63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்த புரட்சிவீரன் ஜதீந்த்ரநாத் தாஸ் நினைவு நாள்: 13 செப்டம்பர் 1929: 25 வயதே ஆன ஜதீன் தா லாகூர் சிறையில் 63 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த நினைவு நாள் இன்று. பிரிட்டிஷ் அடக்குமுறை ஆட்சியில் சிறையில் அனைவரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும். ஆங்கிலேய கைதிகளுக்கு சமமாக இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 63 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணா விரதம் இருந்து இறுதியில் உயிர்த் தியாகம் செய்தவர் ஜதீந்திர நாத் தாஸ் எனும் ஜதீன் தா. இவரைப் போன்று எண்ணற்ற வீரர்களின் பெயர்கள் வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. உண்மை சரித்திரத்தை அறிந்து கொள்வோம்.