ஸ்கந்த புராணத்தில் திலோதகி நதி பற்றிய வர்ணனைகள் இடம் பெற்றுள் ளன. காலப்போக்கில் நதி இருந்த அடையாளமே தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு.
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் வறண்டு போன, ஆக்கிரமிப்புக்குள்ளான அல்லது மாசுபட்டு கழிவு நீர் கலந்து பயனற்றுப் போய்விட்ட நதிகள் ஏரிகள் குளங்கள் மிகப் பெரிய அளவில் சீரமைக்கப்பட்டு உயிரோட்டம் பெற்று வருகிறது.
பிலிபட் தொகுதி வழியாகப் பாயும் கோமதிநதி சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அடுத்து திலோதகி நதியை மீட்டெடுக்க வேகமாக வேலை நடைபெற்று வருகிறது.
48 கி.மி. தூரத்திற்குப் பாயும் திலோதகி நதியின் 12 கி.மி. தூரம் மீட்டெடுத்து சுத்தம் செய்யப்பட்டதில் அதில் இப்போது நீரோட்டம் தடையின்றிப் பாய்ந்து செல்கிறது.