கேஜரிவாலின் மிகமிக நெருக்கமான கட்சிப் பிரமுகரும் எம்.எல்.ஏ.வுமான அமானுல்லா கான் வீட்டில் நடந்த சோதனையில் கட்டுக்கட்டுகளாக ரூபாய் நோட்டுகளுடன் அனுமதி பெறாத வெளிநாட்டு Breta கைத்துப்பாக்கியுடன் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.வக்ஃப் வாரியத்தில் நடந்துள்ள முறை கேடுகள் தொடர்பாக ஊழல் எதிர்ப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அமானுல்லா கான் டெல்லி வக்ஃப் வாரியத் தலைவராக இருந்து வருகிறார்.