புதிய பாரதம் தொலைநோக்குப் பார்வை – தொழில் துறைக்கு அழைப்பு :பாதுகாப்புத் துறை அமைச்சர்

0
285

பாரத பாதுகாப்பு தளவாட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 5ம் ஆண்டு கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘புதிய பாரதம்’ என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, அதிநவீன செலவு குறைந்த பொருட்களைக் கண்டறிந்து தயாரிக்க பாரத பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் துறைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உள்நாட்டு தேவையை மட்டுமின்றி, சர்வதேச நாடுகளின் தேவையையும் பூர்த்தி செய்யும். பாதுகாப்பான, வலிமையான நாடால் மட்டுமே, வெற்றியின் உயரத்தை அடையமுடியும். உலகில் வலிமையான நாடுகளில் ஒன்றாக பாரதத்தை திகழச்செய்யும் வகையில், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை உறுதி செய்ய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கான உகந்த சூழலை உருவாக்க தனியார் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here