தமிழகத்தில் பாரம்பரிய பழங்குடி மருத்துவத்துக்கு தேசிய விருது

0
337

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கரிக்கையூர் இருளர் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள், 60.கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ‘ஆயுர்வேதா பார்வை 2047’ என்ற தலைப்பில், பல்துறை சுகாதார விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்லைக்கழகம் சார்பில், தேசிய அளவிலான மாநாடு கடந்த,25ல் நடந்தது.

நீலகிரி பழங்குடியின கிராமங்களில் மருத்துவ சேவையாற்றி வரும் காளியம்மாள், அப்பகுதியில் உள்ள பச்சிலை, வேர்உள்ளிட்ட மூலிகை வாயிலாக, பக்க விளைவு இல்லாத, 100க்கும் மேற்பட்ட நோய்களுக்குமருந்து கண்டுபிடித்துள்ளார் என்பது குறித்து, ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, மத்திய கலாசாரத்துறை சார்பில், டாக்டர் மூர்த்தி, நிகழ்ச்சி குழு தலைவர் டாக்டர் ஹரிராமமூர்த்தி ஆகியோர், காளியம்மாளுக்கு, ‘தன் வந்திரி’ என்ற தேசிய விருது வழங்கினர்.

ஆதிவாசி சங்க செயலாளர் ஆல்வாஸ் கூறுகையில், ”இருளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த காளியம்மாள், கடந்த 8 ஆண்டுகளாக எங்கள் சங்கத்துடன் இணைந்து, பல்வேறு நோய்களை குணப்படுத்தும் பாரம்பரிய மருந்துகள் கண்டுபிடித்துள்ளார்.

இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது, நீலகிரி மக்களுக்கு பெருமை,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here