மத்தியப் பிரதேசத்தில் மற்றொரு லவ் ஜிகாத்

0
257

மத்தியப் பிரதேசத்தில் முகமது அக்ரம் என்ற முஸ்லிம் நபர், தனது பெயரை அமர் குஷ்வாஹா என கூறி போலியாக ஒரு ஹிந்துவாக நடித்து ஒரு பெண்ணிடம் நட்பு கொண்டார். ஒரு மாதம் பழகிய பின் அந்த பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார். பின்னர் தனது சுயரூபத்தை வெளிப்படுத்திய அந்த கொடூர நபர், தன்னை முகமது அக்ரம் என்று வெளிப்படுத்திக்கொண்டு அந்த பெண்ணை திருமணத்திற்காக மதம் மாறுமாறு வற்புறுத்தினார். அவரிடம் இருந்து தப்பிவந்த அந்த பெண், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், மத்தியப் பிரதேச மத சுதந்திரச் சட்டம் 2020 மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவான முகமது அக்ரமைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல் நிலைய பொறுப்பாளர் சுதிர் அர்ஜாரியா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here