கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
236

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சார்தாம் கோயில்களான பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட கோயில்கள் மற்றும் ஹரித்வார் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான ஜமீர் அஹமது இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்தப் போவதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கோயில்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here