பி.எப்.ஐ செயலாளர் கைது

0
157

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கேரள மாநில செயலாளர் சி.ஏ. ரவுஃப். பாலக்காடு பட்டாம்பிக் கரம்பில் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த மாதம் பி.எப்.ஐ. தடை செய்யப்பட்ட போது கைதாகாமல் தப்பிச் சென்றுவிட்டார். கேரளாவில் இருந்து தப்பி தமிழகம், கர்நாடகா என்று சுற்றி வந்தவ இவர், இரண்டு நாட்களுக்கு முன், பாலக்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு வர இருக்கிறார் என தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரது வீட்டை கண்காணித்து வந்தனர். திட்டமிட்டபடி வீட்டிற்கு வந்த ரஊஃப்’ஐ உடனடியாக அவர்கள் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். பயங்கர சதித் திட்டங்கள் தீட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர் ரஊஃப் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here