உலகின் எதிர்காலம் பாரதத்தின் வசம்

0
153

ரஷ்யாவில் வல்டாய் டிஸ்கஷன் கிளப் ஏற்பாடு செய்திருந்த வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாரத ரஷ்ய உறவுகள் குறித்து பேசுகையில், “பாரதப் பிரதமர் மோடி ஒரு சிறந்த தேசபக்தர். அவருடைய மேக் இன் இந்தியா திட்டம் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல கொள்கை ரீதியாகவும் சிறப்பானது. எதிர்காலம் பரதத்தின் வசம் தான் உள்ளது. பாரதம் தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பதில் பெருமிதம் கொள்ளலாம். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இன்று நவீன நாடாக பாரதம் கண்டுள்ள வளர்ச்சி பிரம்மாண்டமானது. அந்நாட்டின் மக்கள் தொகையும், அதன் வளர்ச்சியும் அதன் மீது மரியாதையும் ஈர்ப்பும் கொள்ளவைக்கிறது. எங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் முக்கியமானது, தனிச்சிறப்பானது. பல ஆண்டுகளாக பாரத ரஷ்ய உறவு பலமாக உள்ளது. எங்களுக்குள் கடினமான உறவுச் சிக்கல்கள் எப்போதுமே வந்ததில்லை. இரு நாடுகளும் எப்போதுமே ஒன்றுக்கொன்று துணையாக இருக்கின்றன. இது எதிர்காலத்திலும் நீடிக்கும் என்று நம்புகிறேன். ரஷ்ய உரங்களை கூடுதலாக அளிக்குமாறும் பிரதமர் மோடி கோரியுள்ளார். ஆகையால் முன்பு வழங்கியதைவிட 7.6 மடங்கு அதிகமாக உரங்களை பாரதத்துக்கு நாங்கள் ஏற்றுமதி செய்கிறோம். இருநாடுகளுக்கும் இடையேயான விவசாயம் தொடர்பான வர்த்தகம் இருமடங்காக அதிகரித்துள்ளது” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here