1. திரு.நாராயண ஐயங்கார் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள எதிர்க்கோட்டை என்னும் சிற்றூரில் 1861 அக்டோபர் 31 ஆம் நாளில் பிறந்தார்.
2. 24.5.1901 ல் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்ட போதிருந்து தமிழ்ச்சங்கக் கலாசாலைத் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று, தன் இறுதிக்காலம் வரை (ஏறத்தாழ நாற்பத்தாறு ஆண்டுகள்) கலாசாலைத் திறம்பட நிர்வகித்தார்.
3. மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்படும் செந்தமிழ் இதழின் ஆசிரியராக 1911 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
4. வான்மீகரும் தமிழும் – 1938 செந்தமிழ் இதழில் கட்டுரையாக வந்தது, பின்பு புத்தகமாக வெளியிடப் பட்டது.
5. 1945 சேது வேந்தர் ஷண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி அவர்கள் தமது முப்பத்து ஏழாம் ஆண்டு நிறைவு விழாவில் பொற்பதக்கமும் பட்டும் பரிசும் நல்கிப் பாராட்டினார்