சென்னை மைசூரு வந்தே பாரத் ரயில்

0
259

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11ம் தேதி பெங்களூரு வருகிறார். அன்றைய தினம், சென்னை மைசூரு இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இது பாரதத்தின் ஐந்தாவது மற்றும் தென் பாரதத்தின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை. மேலும், பிரதமர், கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது முனையத்தை திறந்து வைப்பதுடன் அதே விழாவில் கெம்பே கவுடாவின் 108 அடி உயர வென்கல சிலையையும் திறந்து வைக்கிறார்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here