ஐ.எஸ்., அல்கொய்தா பாணியில் தாக்குதல் திட்டம்

0
147

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீபாவளியையொட்டி மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை காவலர்கள் முபினின் கூட்டாளிகளான 6 பேரை கைது செய்தனர். அவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார். அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள்படி, இறந்த முபினும், அவனது கூட்டாளிகளும் கோவையில் 3 கோயில்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் ஒத்திகைகளையும் மேற்கொண்டனர். இந்த பயங்கரவாதத்தை அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் சித்தாந்தத்தில் உருவான தன்னந்தனியாக செயல்படுத்தும் ‘ஒற்றை ஓநாய்” தாக்குதல் முறையை பின்பற்ற முயற்சித்தனர். இதற்காக வெடிகுண்டு தயாரிப்பைப் பற்றி இணையத்தில் கிடைக்கும் தகவல்களைப் படித்து அறிந்துகொண்டனர். முபினின் வீட்டில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள கோனியம்மன் கோயில், கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் 4 கி.மீ தொலைவில் உள்ள புலியகுளம் விநாயகர் கோயில் பகுதிகளை தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கான இடங்களாக தேர்ந்தெடுத்துள்ளனர். முபின் தனது பயங்காவாத தாக்குதலில் மூலம், கோயில் மற்றும் அருகிலுள்ள சில குடியிருப்புகள் உட்ப்ட சுமார் 100 மீட்டர் சுற்றளவு பகுதியை அழிக்க நினைத்தார் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here