நாட்டிலேயே முதல் முறையாக, மத்தியப் பிரதேசத்தின் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய மூன்று எம்.பி.பி.எஸ் பாடங்க ள் ஹிந்தியில் அறிமுகப்படுத்தப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அக்டோபர் 16ம் தேதி போபாலில் மொழிபெயர்க்கப்பட்ட எம்.பி.பி. எஸ் முதலாம் ஆண்டு புத்தகங்களை வெளியிட்டார். அவ்வகையில், இனி தமிழிலும் எம்.பி.பிஎஸ் படிக்கலாம். இதற்காக, பாடங்களைத் தமிழுக்கு மொழிமாற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் மருத்துவப் பாடங்களைத் தமிழுக்கு மொழிமாற்றி வருகிறது. இது அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது. ‘எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷய்யன் மருத்துவப் பாடங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை ஏற்கெனவே தொடங்கியுள்ளார்’ என இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கான உயர் நிலைக் குழுவின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி கூறியுள்ளார்.