அரசியலமைப்புச் சட்டத்தில் பாரதம் மதச்சார்பற்ற நாடாக உள்ளது. பாரதம் தனித்துவமான நாடு. பிரிட்டிஷ் ஆட்சியின்போது, நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் போன்றவைகளை அழித்துவிட்டார்கள். அதை மீட்டெடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். தற்போது ஆயுதங்கள் ஏந்தும் சில நாடுகள் அழிவுக்கான ஆபத்துகளை உருவாக்கி வருகின்றன. சில நாடுகளின் மீது அவநம்பிக்கை, சமூக ஒழுங்கின்மை போன்றவை ஏற்பட்டுள்ளதால் தற்போது உலகமே பெரும் குழப்பத்தில் உள்ளது. பாரதம் என்பது ரிஷிகள் மற்றும் முனிவர்களின் ஆன்மிக சிந்தனையில் உருவானது. அவர்களின் வாழ்வு மற்றும் கருத்துகளை நாம் பின்பற்ற வேண்டும். இது தேசத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, மனிதத்தையும் வளர்க்க உதவும். சுவாமி விவேகானந்தர், ஆச்சார்யா ஸ்ரீதுளசி போன்ற துறவிகள் வழியில் நாம் நடக்க வேண்டும்” என்று கூறினார்.