1. சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டு, திருச்சிராபள்ளிக்கு அருகில் உள்ள திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார்.
2. இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
3. ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது, சிதறும்
ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவுஎன்று பெயர்.
4. இக்கண்டுபிடிப்புக்குநோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய உதவுகிறது.
5. 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார்.
6. பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.