ஹிந்து மாணவர் மீது தாக்குதல்

0
95

ஹைதராபாத்திலுள்ள ஐ.பி.எஸ் நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் பி.பி.ஏ., எல்.எல்.பி. படித்து வருபவர் ஹிமாங் பன்சால் என்ற ஹிந்து மாணவர். கடந்த 2ம் தேதி, பன்சாலின் அறைக்கு அதே கல்லூரியில் படிக்கும் சில முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நுழைந்தனர். அப்போது அறையில் தனியாக இருந்த பன்சாலை, பேன்டை கழட்டும்படி கூறினர். பன்சால் அதனை மறுக்கவே, கன்னத்தில் அறைந்த முஸ்லிம் மாணவர்கள், அவரை ‘அல்லாஹூ அக்பர்’ என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தினர். வேறு வழியின்றி பன்சாலும் அல்லாஹூ அக்பர் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடவில்லை. அவரை எட்டி உதைத்தும், அவர் மீது ஏறி அமர்ந்தும் கடுமையாக தாக்கி காயப்படுத்தினர். இதனால், பன்சாலுக்கு முகம், தலை என உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. தாங்கள் தாக்கியதை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தாலோ அல்லது வேறு யாரிடமாவது சொன்னாலோ, கல்லூரியில் படிக்க முடியாது, கொலை செய்து உடலை கண் காணாத இடத்தில் வீசி விடுவோம் என்றும் அந்த முஸ்லிம் கும்பல் மிரட்டியது. இந்த வன்முறை சம்பவத்தை அந்த குழுவே வீடியோ பதிவும் செய்துள்ளது. இதனால் பயந்துபோன பன்சால், தான் தாக்கப்பட்டது குறித்து யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், இந்த வீடியோ எப்படியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து இது கடும் சர்ச்சையை கிளப்பியது. பன்சாலின் பெற்றோரும், உறவினர்களும், நண்பர்களும் பன்சாலை தொடர்புகொண்டு அதுகுறித்து விசாரித்தனர். இச்சம்பவம் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஹிந்து அமைப்பினர், பன்சாலிடம் இருந்து புகாரை பெற்று காவல் நிலையத்தில் கொடுத்து வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த முஸ்லிம் மதவெறி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here