1. ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே நவம்பர் 19, 1914 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் பிறந்தார். ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சீர்திருத்தவாதி.
2. நாக்பூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (தத்துவம்) பட்டமும், சாகர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டமும் பெற்றார். விவேகானந்தரின் போதனைகளால் கவரப்பட்டு 1972ல் கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரத்தை நிறுவினார்.
3. இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்துவதாலும், அர்பணிப்புடன் கூடிய சேவையாலும் இந்தியாவை வலுவாக்கலாம் எனும் குறிக்கோளுடன், தனது இறுதி மூச்சுள்ளவரை உழைத்தார்.
4. தனது உறவினர் அண்ணாஜி மூலம் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) இணைந்தார்.
5. ஆர்.எஸ்.எஸ் இன் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.
6. கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், அவருக்கு நினைவு மண்டபம் எழுப்ப விவேகானந்தர் நினைவு மண்டப கமிட்டியை உருவாக்கினார். இதற்காக இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்து, நிதி திரட்டி மண்டபத்தை கட்டிமுடிக்க பாடுபட்டார். நினைவு மண்டபத்துடன் விவேகானந்தரின் போதனைகளை வழிநடத்த விவேகானந்த கேந்திரத்தையும் நிறுவினார்.