பாரத நேபாள் எல்லையையொட்டி புற்றீசல்களைப் போல் எண்ணற்ற மதரஸாக்கள் பெருகியுள்ளன. 1500 மதரஸாக்கள் முறையான அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. அவைகளுக்கு நிதி எவ்வாறு கிடைத்து வருகிறது என்பதைப் பற்றிய தகவல்களைத் திரட்டிட உ.பி. அரசு முடிவு செய்துள்ளது.
மாநிலத்தில் உள்ள மதரஸாக்கள் பற்றிய முழு தகவல்களையும் திரட்டிடுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் களுக்கும் உ.பி.அரசு ஆணை பிறப்பித்தது.
மாநிலத்தில் 5000 க்கும் அதிகமான மதரஸாக்கள் இருப்பது தெரிய வந்துள் ளது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மதரஸாக்கள் அங்கீகாரம் பெறாதவை.