6 பேரின் காவல் நீட்டிப்பு

0
120

கோவை சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த மாதம் 23ம் தேதி கார் வெடிகுண்டு முயற்சியில் உயிரிழந்த பயங்கரவாதி ஜமேஷா முபினின் கூட்டாளிகளான முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேர் காவல்துரையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழகை தற்போது விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏவின் அதிகாரிகள், இந்த 6 பேரும் பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 6 பேருக்கும் டிசம்பர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here