மீண்டும் ‘வியத்தகு இந்தியா’ பிரச்சாரம்

0
102

மத்திய சுற்றுலாத்துறை செயலாளர் அர்விந்த் சிங், “பாரதத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த ‘வியத்தகு இந்தியா’ என்ற பெயரில் கடந்த 2002ம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2019ல் உருவான கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலாத் துறை முழுவதுமாக முடங்கிப் போனது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, ‘வியத்தகு இந்தியா’ பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஜி20 அமைப்புக்கு பாரதம் தற்போது தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் இது நமது சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். கொரோனாவுக்கு முன்பு காணப்பட்ட வேகத்தை மறுபடியும் கொண்டுவரும். 2019 காலகட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை1.7 கோடியாக இருந்தது. 2023ல் ஜி20 மாநாடு பாரதத்தில் நடைபெறவுள்ளதால் வெளிநாட்டிலிருந்து பாரதம் வருவோர் எண்ணிக்கை இதனை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, அவர்களுக்கு கலாச்சார, ஆன்மிக ரீதியாகவும், மனதளவிலும் புத்துணர்வு தரும் நிகழ்வாக அமையும்” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here