கைவினைஞர்களுக்கான ‘ஸ்வதேஷ்’ முயற்சி

0
89

பாரத கைவினைப் பொருட்களுக்கு உள்ளூர், உள்நாடு மற்றும் சர்வதேச மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், கைவினைஞர்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு உலகளாவிய தளத்தை வழங்கும் முயற்சி ஒன்றை ரிலையன்ஸ் நிறுவன குழுமத்தை சேர்ந்த ரிலையன்ஸ் ரீடைல் முன்னெடுத்துள்ளது. கைவினைஞர்கள் தயாரித்த பொருட்களை மட்டுமே விற்கும் சிறப்புக் கடைகளை பாரதம் முழுவதும் திறந்து, அவர்களது திறனை உலக முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியாக ‘ஸ்வதேஷ்’ என்ற பிராண்டின் கீழ் ரீடைல் கடைகளைத் திறக்க உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் ரிலையன்ஸ் ரீடைல் அறிவித்தது. இந்நிலையில் முதல் கடையை டெல்லியின் டெல்லியின் முக்கிய வர்த்தகப் பகுதியான கனாட் பிளேஸ் பகுதியில் திறக்க உள்ளது. இந்த ஸ்வதேஷ் கடையில் பாரதத்தின் விவசாயம் மற்றும் உணவுப் பொருட்கள், கைத்தறிகள், ஆடைகள், ஜவுளிகள், கைவினைப் பொருட்கள், கையால் செய்யப்பட்ட இயற்கைப் பொருட்கள் போன்றவை பிரத்தியேகமாக சந்தைப்படுத்தப்பட உள்ளன. இதற்காக கனாட் பிளேஸ் பகுதியின் ‘இ’ பிளாக்கில் சுமார் 30,000 சதுர அடி இடத்தை ரிலையன்ஸ் ரீடெய்ல் குத்தகைக்கு எடுத்துள்ளது. டெல்லின் கனாட் பிளேஸ் பகுதி தான் நாட்டிலேயே மிகவும் விலை உயர்ந்தது சில்லறை விற்பனை பகுதியாகும். உலகெங்கிலும் உள்ள நுகர்வோர்களுக்கு உண்மையான கைவினைப் பொருட்களை உரிய பிராந்திய கைவினைஞர்களிடமிருந்து நேரடியாகப் பெற்று விற்பனை செய்யவும், பாரத கைவினைஞர்கள் மற்றும் விற்பனையாளர்களை இணைக்கவும் ஒரு உலகளாவிய சந்தையை ஸ்வதேஷ் உருவாக்கும் என ரிலையன்ஸ் ரீடைல் தெரிவித்துள்ளது. பாரதத்தில் இதுவரை பாம்பே ஸ்டோர் மட்டுமே கைவினைப் பொருட்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட வணிகமாக விளங்கி வந்தது. இது விமான நிலையங்கள் மற்றும் முக்கியச் சுற்றுலா நகரங்களில் கலைப்பொருட்கள், பரிசுப் பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், நினைவுப் பொருட்களை விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here