ஜி20 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

0
315

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் நடைபெற்ற
கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “ஜி20 கூட்டமைப்பிற்கு பாரதம் தலைமை ஏற்று இருப்பது நாடு முழுவதும் கொண்டாடப்படும். நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் பாரதம் குறித்து உலகம் இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இது. ஜி20 தொடர்பான நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தின் மேம்பாட்டுக்காக மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்” என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here