ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு) வளாகத்தில் அமைந்துள்ள பல கட்டடங்களின் சுவர்களில் ஹிந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்கள் மற்றும் வைசியர்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வளாகச் சுவர்களில் ‘பிராமணர் பனியா, நாங்கள் உங்களுக்காக வருகிறோம், பழிவாங்குவோம், பிராமணர்கள் வளாகத்தை விட்டு வெளியேறுங்கள், பிராமணர்கள் பாரதத்தை விட்டு வெளியேறுங்கள், இப்போது இரத்தம் வரும்” என்பது உள்ளிட்ட வெறுக்கத்தக்க வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. பல பேராசிரியர்களின் அறைகளின் கதவுகளில் ‘ஷாகாவுக்குத் திரும்பிச்செல்’ என்றும் எழுதப்பட்டிருந்தது. இத்தகைய கிராஃபிட்டிகள் நிறைந்த இந்த சுவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இடதுசாரி மாணவர்கள் தான் இதனை செய்துள்ளனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் புகார் அளித்துள்ளார். இந்த நாசவேலைக்கு பல்கலைக் கழக பதிவாளர் அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜே.என்.யு அனைவருக்கும் சொந்தமானது என்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அனுமதிக்கப்படாது. ஜே.என்.யு என்பது உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்தைக் குறிக்கிறது. வளாகத்தில் எந்த விதமான வன்முறைக்கும் இடமில்லை என தெரிவித்துள்ளது. மேலும், மேலும், இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை ஜேஎன்யு துணைவேந்தரிடம் சமர்ப்பிக்குமாறு சர்வதேச ஆய்வுகள் மற்றும் குறைகள் குழுவின் டீனுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த இடதுசாரி குண்டர்களால் குறிவைக்கப்பட்ட பேராசிரியர்களில் நளின் குமார் மொகபத்ரா, ராஜ் யாதவ், பிரவேஷ் குமார் மற்றும் வந்தனா மிஸ்ரா ஆகியோரும் அடங்குவர்.